இட்லி கைமா பிரியாணி


தேவையான பொருட்கள் : 
இட்லி - 4 பாசுமதி சாதம் - ஒரு ஆழாக்கு நறுக்கிய வெங்காயம், தக்காளி- 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன் வனஸ்பதி - 1 டீஸ்பூன் உப்பு, கொத்தமல்லி - சிறிதளவு எலுமிச்சம் பழம் - 1 

செய்முறை : இட்லிகளை துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வாணலியில் வனஸ்பதி உருகியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். இத்துடன் கரம் மசாலா மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். மிளகாய்த் தூள் வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, பொரித்து வைத்துள்ள இட்லிகளை இதில் போடவும் இத்துடன் வெந்த சாதத்தை மிக்ஸ் செய்து எலுமிச்சை சாறு பிழிந்தால் வித்தியாசமான இட்லி கைமா பிரியாணி ரெடி.