இளமையோடு நீண்ட நாட்கள் வாழ

இளமையோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் உங்களுக்காக,  மூப்பைத் தள்ளிப் போட முத்தான குறிப்புகள் இதோ…

1.   ‘ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே, ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வர  வேண்டும்.   வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம்,  செலினியம் இவை  அனைத்தையுமே, ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல்.  இந்தச் சத்துக்கள்  நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக்  கொள்ளும்போது, உங்கள்  முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடலாம்.
 2.   நெல்லிக்காயில்தான், வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு   நெல்லிக்காய், தேனில் ஊற வைத்த சிறு துண்டு இஞ்சியை, எடுத்துக்  கொள்ளுங்கள்.

3. மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை, கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4.  மணத்தக்காளிக்  கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.  கரிசலாங்கண்ணிக்  கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண் புள்ளிகள், தேமல்  போன்றவற்றைப் போக்கி,  மூப்பைக் குறைக்கும்.
5. காலையில்  வெறும்  வயிற்றில், வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல்  சூட்டைக்  குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!

6. ஆண்களுக்கு வயது  அதிகரிக்கும்போது, ‘ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும்.  அவர்கள்,  சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும்  நல்லது.
7   ”மேலே சொன்ன எதையுமே, என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது”   என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில்   கிடைக்கும் இந்த சூரணத்தை, முதல் நாள் இரவே, ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்    போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும், காலையில் வெறும் வயிற்றில்  அந்தத்  தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல்  தீரும். சரும  நோய்கள் சரியாகும்.