புதினா சப்பாத்தி

மருத்துவக்குணம் கொண்ட ஒரு மூலிகை புதினா, உடலுக்கு அழகையும்,சுறுசுறுப்பையும் தரக்கூடியது. இதைக் கொண்டு சப்பாத்தி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா - ஒரு கட்டு
கோதுமை மாவு - ஒரு கப்
சோள மாவு - ஒரு கப்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
புதினாவை சுத்தமாக கழவிபொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கலாம்.
கோதுமை மற்றும் சோளமாவை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள், அத்தோடு தயிர், வெல்லம், எண்ணை, புதினா, மிளகாய் பொடி, சீரகம் இவற்றுடன் அரைத்த இஞ்சி பூண்டு ஆகியவற்றையும். சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் அப்படியே வைத்து வி்டுங்கள்.
புதினா சப்பாத்தி ரெடி!