உணவு மருத்துவக்குறிப்புக்கள்

தேனிற்குப் பதிலாக...
தேன் சாப்பிட முடியாத நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில், இரவில் ஊற வைத்து இருபது கொண்டைக் கடலையை மென்று சாப்பிடவும். ஒரு சிட்டிகை வெந்தயத்தூளும் சாப்பிடவும். கொண்டைக் கடலை மூலம் வைட்டமின் சி கிடைத்து இதயம் சிறப்பாக இயங்கும். வெந்தயத்தூள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதனால் ஆயுள் நீடிக்கும்.

தோல் நோய்களா?
தோல் தொடர்பான நோய்கள் மெல்ல மெல்ல மருந்தின்றிக் குணமாக, பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட வேண்டும். பிறகு பாகற்காயை மதிய உணவில் சேர்த்துவந்தால் போதும். இரண்டும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி தோல் நோய்களைத்துரத்தும்.

பழச்சாறு, புற்றுநோய் வராமல் தடுக்குமா?
இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுத்தும், குணமாக்கியும் நலமுடன் வாழும் சக்தி மனிதர்களிடம்தான் உள்ளது.

நெஞ்சு வலியைக் குணமாக்கும் மாதுளம் பழத்தில் புற்றுநோயைக் குணமாக்கும் சக்திவாய்ந்த எல்லாஜிக் அமிலம் உள்ளது.