உணவுக்குறிப்புகள்

திராட்சையின் நன்மைகள்

தினமும் திராட்சைச் சாறு அருந்தி வந்தால் ஒற்றைத் தலைவலி முழுமையாகக் குணமாகும். குறைந்தது 21 நாட்களாவது தொடர்ச்சியாக காலை ஒரு வேளை திராட்சைச் சாறு அருந்தி வரவும். இதனால் நெஞ்சுவலி இருந்தால் குணமாகும். இதயமும் பலப்படும். கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்களின் மூளையும் நன்கு ஓய்வு நிலைக்குத்திரும்பும்.


இதனால் புத்துணர்வுடன் வாழலாம். திராட்சைச் சாற்றில் சீனி சேர்க்காமல் மிக்ஸியின் அடியில் உள்ள திராட்சைத் தோல்களையும் சேர்த்து சாப்பிட்டால்தான் இவ்வளவு நன்மைகள்!
வெங்காயம் சாப்பிடவும்
நம் உடலின் உள்ள இரத்தத்தை நன்கு சுத்தம் செய்ய தினமும் பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கிக் சாப்பிட்டால் போதும். இப்படி யோசனைத் தருபவர் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பார்மஸி பல்கைலக்கழகப் பேராசிரியர் டாக்டர் கிறீஸ் பீச்சர், ஆண்டு 2000.
வயதான காலத்திலும் கண்பார்வை நன்றாகத் தெரிய வேண்டும். தோல் வறண்டு போகாமலும் இருக்க வேண்டும் என்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள காரட், பால், முட்டை, மாம்பழம் போன்றவற்றைத் தவறாது (பிடிக்காமல் இருந்தாலும் சரி) சாப்பிட்டு வரவேண்டும் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நம் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.


சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இது புற்றுநோய் கிருமிகளை அழிக்கும். முதுமையைக் குறைக்கும். உருளைக்கிழங்கில் உள்ளதைவிட இதில் மூன்று மடங்கு சி வைட்டமின் உள்ளது. நார்ச்சத்து B6 இரும்புச்சத்து, பொட்டாட்சியம் முதலியவை இதில் ஏராளமான உள்ளன. இதில் உள்ள பழச்சர்க்கரை உடனே உடலுக்குச் சக்தியையும் கொடுத்துவிடுகிறது.