மாங்காய் தொக்கை செய்வதற்கு நீளமான கிளிமூக்கு மாங்காய் சிறந்தது. சிறதளவு தித்திப்பாக இருந்தாலும் பரவாயில்லை.
தேவையான பொருட்கள் :
ஒரு மாங்காய் துருவியது
எண்ணெய் 2 கப்
உப்பு 1/4 கப்
மிளகாய்த்தூள் 1/4 கப்
மஞ்சள் தூள் 2 தேக்கரண்டிதேவையான பொருட்கள் :
ஒரு மாங்காய் துருவியது
எண்ணெய் 2 கப்
உப்பு 1/4 கப்
மிளகாய்த்தூள் 1/4 கப்
பெருங்காயப்பொடி 2 டீஸ்பூன்
கடுகு 2 டீஸ்பூன்
வெந்தயம் 20 கிராம்
செய்முறை :
வாணலியைக் காய வைத்து, வெந்தயத்தை வெறும் சட்டியில் எண்ணெயில்லாமல் வறுத்துக்கொள்ள வேண்டும். வாசனை வந்த பின்னர் எடுத்துவிடவும். பின் வாணலியைக் காயவைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து துருவிய மாங்காய், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி, மாங்காயில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வெந்தபின், மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது இன்னொரு வாணலியில் எண்ணெய் காய வைத்து சூடானதும் சூடான எண்ணெயில் கடுகு தாளித்து பெருங்காய்பொடி, காரப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவும். காரம் சேர்ந்த சூடான எண்ணெயை மாங்காயில் கொட்டி கிளறி, காய்ந்த பாட்டிலில் போட்டு மூடிவிடவும். இதை மாதக்கணக்கில் வைத்துக்கொள்ள முடியும்