கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்  :
மேல் மாவிற்கு - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
நல்லெண்ணெய் - 2 சிட்டிகை
வெல்ல பூரணத்திற்கு வெல்லம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
 
மேல் மாவு செய்ய : ஒரு கப் பச்சரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, ஒரு கப் நீ்ர் சேர்த்து மிக நைசாக அரைக்கவும். இதனுடன் அரைக்க்ப் நீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.


நான்-ஸ்டிக் தவாவில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த அரிசி மாவு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் மாவு நன்கு உருண்டு, திரண்டு தவாவில் ஒட்டாமல் வெந்து வரும் வரை கிளறவும்.

மாவை ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.

வெல்லப்பூரணம் செய்ய :

அடிகனமான வாணலியில் சிறிது நீர் ஊற்றி பொடியாக அரிந்த வெல்லம் போட்டு வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு கெட்டியான வெல்ல நீரை தூசு நீங்க வடிகட்டிக்கொள்ளவும்.

வாணலியில் தேங்காய்த் துருவல், வடிகட்டிய வெல்ல நீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து வரும்வரை கிளறி வெல்லப் பூரணம் தயாரிக்கவும்

கொழுக்கட்டை செய்ய :

வெல்லப் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
தாயாரி்த்த மேல்மாவை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக்கி கிண்ணங்கள்போல் அதில் சிறு குழி செய்து அதனுள் வெல்லப்பூரண உருண்டையை வைத்து மூடி கொழுக்குட்டை போல வடிவ மைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.

குறிப்பு : மேல் மாவு உருண்டையை இருகட்டை விரல்களால் அழுத்தி அழுத்தி மெல்லிய சோப்பு போல் வடிவமைத்து அதனுள் வெல்லப்பூரண உருண்டையை வைத்து மாவை நன்கு இழுத்து மூட வேண்டும். இது கொழுக்கட்டை ஆவியில் வேகும்பொழுது பூரணம் வெளியே வேகும்போழுது பூரணம் வெளியே வராமல் இருக்க உதவும்.