மண் குளியல் செய்வது எப்படி?

மண் குளியல் என்றால் நாம் விளங்கியிருப்பது மண்ணில் உருண்டு புரல்வதென்று. ஆனால் உண்மை அதுவன்று. முறையாகச் செய்தால் அது சிறந்ததொரு மூலிகை குளியலாகும். அதனால் ஏற்படும் பலன்கள் பல.

மண் குளியலுக்காக உபயோகப் படுத்தப்படும் மண், மனிதன் காலடி படாத புற்று மண் ஆகும். புற்று மண் என்பது பூமிக்கு கீழே சுமார் 300 அடி ஆழத்திலிருந்நு கறையான் தனது வாயால் சுமந்து மேலே கொண்டு வந்து புற்று அமைக்கும் மண் ஆகும். இந்த மண்ணில் கறையான் எச்சிலும் கலந்திருப்பதால் இதற்கு இயற்கையிலே மருத்துவ குணம் இருக்கிறது. 

மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.
  • பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
  • மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.
  • தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மண்னை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.
  • சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
  • 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மண் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
  • பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.
  • கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.
  • தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.
  • அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் புற்று மண் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.