செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.
மீதியுள்ள நெய்யை விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.