ஃப்ருட் மோல்ட்


என்னென்ன தேவை?

கடல்பாசி - 10 கிராம், தண்ணீர் ,1 கப், சர்க்கரை - முக்கால் கப், தர்ப்பூசணிச்சாறு - ஆப்பிள் - 1.முலாம்பழம்-1 கப், மற்ற பழங்கள் விருப்பத்துக்கேற்ப - தேவையான அளவு, தேன் -1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம் பழம் -1, உப்பு -1 சிட்டிகை, தர்ப்பூசணி விதை வெள்ளரி விதை - சிறிது, கடைந்த பாலேடு - சிறிது, வெண்ணெய் - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

கடல்பாசியை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும். மிக்சியில் நன்றாக அரைக்கவும். ஆப்பிளையும் தோலுரித்த வாழைப்பழத்தையும் ஒரே அளவிலான சதுரங்களாக நறுக்கவும். நிறம் மறாமலிருக்க தேனையும் எலுமிச்சம் பழச்சாற்றையும் அதில் சேர்க்கவும். தர்ப்பூசணிச்சாறு, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சிவப்பு கலரை சேர்த்துப் பழங்களோடு கலந்து, தர்ப்பூசணி விதை. வெள்ளரி விதை சேர்த்துத் தனியே வைக்கவும்.கடாயில் ஒரு கப் த்ண்ணீரை ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், மசித்த கடல் பாசயைச் சேர்த்து நன்றாகக் கரையும் வரை கலந்து வி்டவும். பளபளெவென்று வெந்ததும், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி, பழச்சாற்றையும் பழத்தையும் சேர்த்த கலவைய ஊற்றிக் கலக்கவு்ம். வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் முன் பாத்திரத்தை அப்படியே பரிமாறும் தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும். சிறிதளவு பழங்களை நடுவில் வைத்து, கடைந்த பாலேட்டை மேலே ஊற்றிப் பரிமாறவும்.