டோஃபு-காய்கறி கேழ்வரகு சேவை


என்னென்ன தேவை?
ரெமிடக்ஸ் கேழ்வரகு சேவை-1பாக்கெட், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம்-கால் கப், பச்சைமிளகாய்-3, நறுக்கிய முளைக்கீரை- கால் கப், மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடமிளகாய் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-வதக்குவதற்கு உப்பு- ருசிக்கேற்ப, டோஃபு (சோயா பனீர்) - 50 கிராம், எலுமிச்சை பழம் - 1
தாளிக்க...
கடுகு-கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு -1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், கறிவேப்பில்லை- சிறிகது.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு சேவையை பாக்கெட்டில் கூறியபடி, 2 டீஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, 3 நிமி்டங்கள் கழித்து எடுத்து வைக்கவும். டோஃபுவை மெல்லிய நீளத்துண்டுகளாக நறுக்கித் தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்தபின், பச்சை மிளகாய், வெங்காயம் வதங்கியதும், கீரை சேர்த்து நன்கு கலக்கி விடவும். காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வதக்கவும் தயாரித்த சேவையை அதில் சேர்த்து, உப்பைத் தூவி, நன்கு சூடாக்கும் வரை கிளறி விடவும்,கடைசியாக நறுக்கிய டோஃபு, கொத்தமல்லித் தைழ தூவி, விட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்