ஓட்ஸ் மசாலா கிரேவி

என்னென்ன தேவை?

சுரைக்காய்-அரை கிலோ, ஓட்ஸ்-1 டீஞஸ்பூன், காய்ந்த மிளகாய் வற்றல் - 3, சோம்பு (பொடித்தது) -2 டீஸ்பூன் பெருங்காயப் பொடி - 1சிட்டிகை, இஞ்சிப்பொடி - அரை டீஸ்பூன்,எண்ணெய் -5 டீஸ்பூன், கெட்டித் தயிர் (நன்கு அடித்தது) - கரம் மசாலா - 1டீஸ்பூன், பிரரியாணி இலை - 2, லவங்கப்பட்டை (பொடித்தது) - 1 துண்டு, தண்ணீர் -1 கப்.

எப்படிச் செய்வது?

சுரைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். லேசாக வதக்கபவும், ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து அதோடு பெருங்காயம், சீரகம், மிளகாய் வற்றல், வதக்கிய சுரைக்காய், காய் வற்றல், வதக்கிய சுரைக்காய், தண்ணீர் சேர்க்கவும், 2-3 நிமிடங்கள் வேக விடவும்.

பிறகு,ஓட்ஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி வி்ட்டு, சோம்புப் பொடி, இஞ்சிப் பொடி. உப்பு, கரம் மசாலா, பிரியாணி இலை, லவங்கப்பேட்டை பொடி, தயிர் சேர்க்கவும்.

ஐந்து நிமி்டங்கள் வேக விடவும். கிரேவி திரளும் வைரை நன்கு கிளறவும். சூடான சாதத்ததுடன் பரிமாறவும்.

என்ன சிறப்பு?

உடல் இளைக்க நினைப்பவர்களுக்கும், ஓட்ஸை விரும்புவோருக்கும் ஏற்ற சுவையான உணவு இது?

-ஆர்.சுந்தரவல்லி, சென்னை-41.