சிக்கன் நூடுல்ஸ்

தேவையானவை ;
கார்லிக் சாஸ் 3 டேபிள் ஸ்பூன்
நூடுல்ஸ் 300 கிராம்
கொத்திய சிக்கன் 200 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
தக்காளிப்பழம் 1
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 5
அஜினமோட்டோ 5 சிட்டிகை
எலுமிச்சம்பழம் 1
முந்திரிப்பருப்பு 500 கிராம்
தூள் உப்பு தேவையானது
நெய் 2 டேபிள் ஸ்பூன்
கோல்டுவின்னர் 300 மில்லி
நூடுல்ஸ்டுடன் தகுந்த உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு 100 மில்லி எண்ணெய் ஊற்றிப்புரட்டி, தாம்பாளத்தில் பரப்பி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும், முந்திரியை இரண்டாகப் பிளந்து கொள்ளவும்
சிக்கனை அலசி தண்ணீரை ஒட்டப் பிழிந்து விடவும்.



செய்முறை ;
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, முந்திரியைப் போட்டுப் பொரிக்கவும். அதில் வெங்காயம், சிறிது உபபு சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள்களைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி, கார்லிக் சாஸை ஊற்றி, சிக்கனைப் போட்டு, தக்க உப்பு சேர்த்து, மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நன்றாக வதக்கவும். அஜினமோட்டோ, எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கிளறவும்.
கறி வெந்ததும் நூடுல்ஸைக் கொட்டி, நன்றாகப் புரட்டிக் கிளறி நெய்விட்டு இறக்கவும். நூடுல்ஸ்களுடன் ருசியும் பின்னிக்கொண்டிருக்கும்