வெஜ் நூடுல்ஸ்


தேவையானவை ;
நூடுல்ஸ் 500 கிராம்
முட்டைக்கோஸ் 100 கிராம்
காரட் 100 கிராம்
காலிஃப்ளவர் 100 கிராம்
பச்சைமிளகாய் 10
லோயாசாஸ் 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 100  கிராம்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்


ஆப்பிள் க்ரீம் பவுடர் 3 சிட்டிகை
தூள் உப்பு தேவையானது
அஜினமோட்டோ 1/4 டீஸ்பூன்
கோல்டுவின்னர் 150 மில்லி
நூடுல்ஸ்களுடன் பவுடர், சிறிது உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் கலந்து 10 நிமிடங்கள் வேகவைத்த, தண்ணீரை நன்றாக வடித்து, தாம்பாளத்தில் பரப்பி வைக்கவும்.
முட்டைக்கோஸ், காரட், காலிஃப்ளவரை நறுக்கி இட்லி தட்டு அல்லது குக்கர் தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நைஸாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை;
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்புதூள் சேர்த்து வதக்கவும், இதில் மிளகுத்தூளை போட்டுப் புரட்டி விடவும்.
மீதி எண்ணெயை ஊற்றி முட்டை கோஸ், கேரட், காலிஃப்ளவர், ஸோயா சாஸ், அஜினமோட்டோ, தகுந்த அளவு உப்பு சேர்த்த 5 நிமிடம் வதக்கவும்.
உலர வைத்த நூடுல்ஸ்களைக் கலந்து நன்றாகப் புரட்டி இறக்கவும், பனீர் குருமா, அல்லது எக் ஸ்ட்யூ வைத்துப் பரிமாறவும்.