தேவையானவை : மொச்சைக் கொட்டை - ஒரு கப், பொட்டியாக நறுக்கிய வெங்காயம், வறுத்துப் பொடித்த அவல் ,தலா கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மொச்சைக் கொட்டையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்த மொச்சையை சேர்க்கவும். இதனுடன் பொடித்த அவல், உப்பையும் சேர்த்துக் கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.