கஜுர் ஷாஹி துக்கடா

தேவையானவை : பிரெட் - 8 துண்டுகள், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பாதம், பிஸ்தாதூள் - தலா 2 டேபிள்டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், பால்-1 லிட்டர், விதை நீக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள் - 1 கப், ரோஸ் வாட்டர்-அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய்-தேவையானஅளவு.
செய்முறை : விதை நீக்கி நறுக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய்த்தூள், பாதம், பிஸ்தா தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையவும்.
பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கி, வட்டமாக வெட்டவும். அதனை அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியே வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, சர்க்கரையைச் சேர்க்கவும். பொரித்த 2 பிரெட் ஸ்லைஸின் வட்டங்களுக்கு நடுவில் பேரீச்சம்பழக் கலவையைக் கொஞ்சம் வைத்து லேசாக அழுத்திவிடவும். பின்பு, அதனை கொதிக்கும் பாலில் ஒரு நிமிடம் நனைத்து, தட்டில் பரப்பி வைக்கவும். மீதி பாலை மேலும் காய்ச்சி, நன்றாகக் கெட்டியானதும், தயாராக இருக்கும் பிரெட் வட்டங்களின் மீது ஊற்றி, ரோஸ் வாட்டர் தெளித்து, சில்லென்று பரிமாறவும்.