கொள்ளு வெஜிடபிள் சுண்டல்

தேவையானவை : கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரி, பப்பாளிக்காய், பீன்ஸ் - சிறிதளவு, கொள்ளு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி, பனீர், துண்டுகள், தக்காளி, சாஸ் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை : காய்கறிகளை ஒரே அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கொள்ளை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, தக்காளியைத் தவிர மற்ற காய்கறிகளை லேசாக தண்ணீர் தெளித்து வதக்கவும், காய்கறிகள் வதங்கியதும் வேக வைத்து, கடைசியாக பனீர் துண்டுகள், தக்காளி துண்டுகள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.