கோதுமை மாவு சுண்டல்

தேவையானவை : கோதுமை மாவு - ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : கோதுமை மாவில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பட்டன் போல் லேசாக தட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் பட்டன் உருண்டைகளைப் போட்டு, வெந்து லேசாக எழுப்பி வரும் போது எடுத்து வடியவிடவும்.
மீதமுள்ள நெய்யில் கடுகு தாளித்து உருண்டையில் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி புரட்டி பரிமாறவும்.