தேவையானவை : கடலை மாவு , 1 கப், அரிசி மாவு-அரை கப், ஏலக்காய்த்தூள்-அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், எண்ணெய், உப்பு-தேவையானஅளவு.
செய்முறை : பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைப் போட்டு, தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கையால் கலக்கவும். பிறகு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பிறகு, பிசைந்த மாவை ஓமப்பொடியாகப் பிழிந்து எடு்த்துக் கொள்ளவும்.
ஒரு கப் ஓமப்பொடிக்கு அரை க்ப வெல்லம் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உருட்டும் பதத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடியைக் கொட்டி, அதில் வெல்ல பாகை ஊற்றி, லட்டுகளாகப் பிடிக்கவும்.