கருப்பட்டி ஆப்பம்

என்னென்ன தேவை?
பச்சரிசி குறுணை - 1 கப், உளுத்தம் பருப்பு -1 கைப்பிடி, வாழைப்பழம் -1,
தேங்காய்த்துருவல் - அரை கப், கருப்பட்டி ( தூளாக்கியது) - 1 கப்,  சோடா உப்பு -1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுந்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். கழுவிய அரிசி, உளுந்துடன் வாழைப்பழம், தேங்காய்த் துருவல், உப்பு சேர்ந்து கெட்டியாக, மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். (முதல் நாள் மாலையே மாவைத் தயார் செய்து கொள்ளவும்)
அடுத்த நாள் காலையில் ஆப்பம் தயாரிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சோடா உப்பை மாவுடன் சேர்த்துக் கலக்கி வைக்கவும். கருப்பட்டித் தூளை அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி, வடிக்கட்டிப் பாகைச் சேர்த்து நன்றாகக் கலக்கி ஆப்பமாக தயாரித்து எடுக்க வேண்டியதுதான்.
என்ன சிறப்பு?
சுவையான, சத்தான, எளிமையான சிற்றுண்டி இது.
தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. விருப்பப்பட்டவர்கள் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிடலாம்.
                                  -எஸ்.வளர்மதி, கொட்டாரம்.­