தேவையானவை : அரிசி மாவு - 3 கப், கடலை மாவு - 1 கப், அரைத்த பூண்டு - காய்ந்த மிளகாய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் - பூண்டு விழுதைச் சேர்த்து, பிசிறில்லாமல் கலக்கவும். தேவையான அளவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பிழியும் பதத்துக்குப் பிசையவும், கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் ரிப்பன் அச்சில் மாவை வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைத்து, சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.