தேவையானவை : வேர்க்கடலை - அரை கப், எள், பொட்டுக்கடலை, கசகசா, முந்திரித் துண்டுகள் - தலா கால் கப், ஏலக்காயத்தூள் -கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பாகு வெல்லம் - முக்கால் கப், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் -சிறிதளவு.
செய்முறை : வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி ஒன்றிரடண்டாக பொடித்துக் கொள்ளவும்,கசகசா, எள்ளை வெறும் கடாயில் தனித் தனியே வறுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, முந்திரியை சூடான கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் ஒரு கரண்டி தண்ணீர் அடுப்பில் வைத்து, கொதித்ததும் வடிக்கட்டி மீண்டும் அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும். பாகு கொதித்து நல்ல பதத்தில் வரும்போது நறுக்கிய தேங்காய் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, கலந்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, நெய்யை விட்டுக் கிளறி, உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும்.