வெஜி்டபிள் ஸ்டீக்ஸ்

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 2 கப், சிவப்பு மிளகாய் - 10, கசகசா - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, பூண்டு - 4 பல், முட்டைக்கோஸ், கேரட், பீட்ருட், உருளைக்கிழங்கு துருவியது - 2 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது
கடலைப் பருப்பை தண்ணீரில் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கசகசா, மிளகாய், சீரகம், பட்டை ஆகியவற்றைப் பொடித்து. பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு பருப்பை வடித்துக் கொள்ளவும். கர கரப்பாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இதனுடன், துருவிய காய்கறிகளைட கலந்து சிறிய வட்டமாகத் தட்டவும். இதை இட்லித் தட்டில் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு இளஞ்சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.
என்ன சிறப்பு
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
எல்லாச் சத்துகளும் நிரம்பிய எளிமையான டிபன்
                                                         எம்.சுபா, சேலம் -1.